அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா- அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு

0 246

அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அதிமுக சார்பில் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ளனர். அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை செப்டம்பர் 15 முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் கொண்டாட அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறிவித்த மற்றும் அறிவிக்கப்படாத அனைத்து மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அண்ணாவின் திருவுருவச்சிலை மற்றும் அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், பொதுக்கூட்டங்களில் சிறப்புரையாற்றுபவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். அதில், செப்டம்பர் 15ம் தேதி விருகம்பாக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சோழிங்கநல்லூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்புரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியதற்கான விபரங்கள் அனைத்தையும் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழுக்கு அனுப்பி வைக்குமாறும் அதிமுக தலைமைக்கழகம் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments