ஆந்திரா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் தொடர்கிறது கனமழை

0 256

ஆந்திரா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் மீண்டும் பெய்து வரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகள் முழு கொள்ளளவை எட்டி திறக்கப்பட்டன. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 19 கிராமங்களும், கிழக்கு மாவட்டத்தில் 16 கிராமங்களும் மிதக்கின்றன. கோதாவரி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பிராசிக் மாவட்டத்தில் கோதாவரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாசிக்கில் உள்ள கங்காபூர், தர்ணா அணைகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இந்த அணைகளில் இருந்து நீரை வெளியேற்ற வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. சாங்கிலி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணா மற்றும் வருணா நதிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments