இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சம்பளம் உயர்வு

0 337

புதிய ஒப்பந்தத்தின்படி இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் சம்பளம் ஆண்டுக்கு 8 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி சமீபத்தில் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டார். 2021 ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைவரை அவர் பயிற்சியாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கபில்தேவ் தலைமையிலான தேர்வுக் குழு ரவிசாஸ்திரியின் ஒப்பந்தத்தை நீட்டித்தது. இந்த நிலையில் புதிய ஒப்பந்தத்தின்படி ரவிசாஸ்திரியின் சம்பளம் ஆண்டுக்கு 10 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்பு அவர் ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் ஊதியம் பெற்று வந்தார். தற்போது ரவிசாஸ்திரியின் சம்பளம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த புதிய ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்ட பரத்அருண், பீல்டிங் பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்ட ஆர். ஸ்ரீதர் ஆகியோரது சம்பளம் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பேட்டிங் பயிற்சியாளராக புதிதாக நியமிக்கப்பட்ட விக்ரம் ரத்தோருக்கு ஆண்டு 2 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments