காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் நடிகை ஊர்மிளா

0 387

நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை ஊர்மிளா மடோன்கர், கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு  மக்களவை தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் பெற்ற அவர் அத்தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் விலகுவதாக ஊர்மிளா அறிவித்துள்ளார்.

திடீர் விலகலுக்கான முழுமையான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளின் மீதுள்ள அதிருப்தி காரணமாகவே ஊர்மிளா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments