ஆயுட்காலம் முடிந்த மிராஜ் 5 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

0 647

ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படை பெறவுள்ள நிலையில், பாகிஸ்தானோ, ஆயுட்காலம் முடிவுற்ற மிராஜ் 5 ரக போர் விமானங்களை, எகிப்திடம் இருந்து வாங்குகிறது. 

மிராஜ் 5 ரக போர் விமானங்கள் தயாரிப்பதை, பிரான்சின் டசால்ட் ஏவியேசன் நிறுவனமே நிறுத்தி விட்ட போதும் பாகிஸ்தான் மற்றும் எகிப்து ராணுவங்கள் மட்டும் அந்த ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

பாலகோட்டில் தீவிரவாதிகள் முகாம்களை குண்டுவீசி அழித்த மிராஜ் 2000 ரக போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான திறன் கொண்ட மிராஜ் 5 போர் விமானங்கள், பாகிஸ்தானிடம் 92 உள்ளன.

மிராஜ் 3 ரக போர் விமானங்கள் 87ம், செங்க்டு ஜே. 7 (Chengdu J-7 and JF-17) ஜே.எப்.17, எஃப் 16 உள்ளிட்ட போர் விமானங்களும் பாகிஸ்தான் விமானப் படை வசம் உள்ளன. இந்த நிலையில், எகிப்து விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு ஆயுட்காலம் முடிவடந்த 36 மிராஜ் 5 ரக போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்து, அதற்கான இறுதி ஒப்பந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

போர் விமானங்களில் ரேடார் கருவிகளை மேம்படுத்தித் தரவேண்டும் என்று எகிப்துக்கு பாகிஸ்தான் நிபந்தனை விதித்துள்ளது. இரவில் கூட துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் பெற்றது மிராஜ் 5 விமானம். திரையுடன் கூடிய தலைக்கவச தொழில்நுட்ப வசதியும் கொண்டது.

ஆயுட்காலம் முடிந்த போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கும் அதேவேளையில், உலகிலேயே அதி நவீன தொழில்நுட்ப அம்சங்களையும், ஆயுதங்களையும் கொண்ட பல்வகைப் பயன்பாட்டிற்கான ரபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படை பெறவுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments