இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமியைக் கைது செய்ய இடைக்காலத் தடை

0 313

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமியை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் வரதட்சனைக் கொடுமை புகார் அளித்தார். இந்தப் புகாரை கொல்கத்தா காவல்துறை விசாரித்து வருகிறது. வழக்கானது, அலிப்பூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணைக்கு முகமது சமி ஆஜராக மறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 15 நாளில் ஆஜராக தவறும் பட்சத்தில், முகமது சமியைக் கைது செய்யும்படி, நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்தார். அப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் முகமது சமி விளையாடிக் கொண்டிருந்ததால் நாடு திரும்பிய பிறகு அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.

இந்த நிலையில், நீதித்துறை நடுவர் உத்தரவை எதிர்த்து முகமது சமி தரப்பில் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, முகமது சமியைக் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். நவம்பர் 2ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அன்று வரை இடைக்காலத் தடை நீடிக்கும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments