தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தர்மசாலா வருகை

0 379

இந்திய அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்க அணி, ஹிமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவுக்கு வந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி-20 கிரிக்கெட் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வரும் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, தர்மசாலாவுக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று மாலை வந்தது.

இதை முன்னிட்டு, தர்மசாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வரும் 5 நாள்கள், தர்மசாலாவில் தென்னாப்பிரிக்க அணி தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, தர்மசாலாவுக்கு வரும் 13ஆம் தேதி வருகை தரவுள்ளது.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, தர்மசாலாவில் தற்போதுதான் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாகவும், அதனால் அப்போட்டியை காண ஹிமாசலப் பிரதேச மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அந்த மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி சஞ்சய் ஷர்மா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments