காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம்

0 393

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கும்பகோணம் பகுதியில் ஏராளமான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. காவிரியில் நீர், இரு கரைகளையும் அணைத்தவாறு பாய்ந்து கொண்டிருப்பதால், தஞ்சை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பட்டால் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்க கும்பகோணம் காவிரி, மற்றும் அரசலாறு பாயும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை சார்பில் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள கொங்கன் வாய்க்கால் உடைந்ததையடுத்து அவ்வழியாக பாயும் தண்ணீர் மணல் மூட்டைகள் மூலம் அடைக்கப்பட்டு மதகுகள் சீர் செய்யப்பட்டு வருகின்றன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments