விளைநிலத்தில் பைப் லைன் அமைப்பதை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

0 183

கோவையில் இருந்து கர்நாடகா வரை விளைநிலங்கள் வழியாக பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு செல்லும் ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மற்றும் சேலம் பகுதி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடகா மாநிலம் தேவனகந்தி வரை பெட்ரோல், டீசல் ஆகியவை குழாய்கள் மூலம் கொண்டு செல்லும் திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

குழாய்கள் விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே நெடுஞ்சாலை வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரனை நேரில் சென்று சந்தித்து மனு அளித்தனர்.

இதைப்போன்று சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டதிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி தலைமை வகித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமனை நேரில் சென்று சந்தித்து முன்னாள் எம்.எல்.ஏ காவேரி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments