பாக்கி தொகைக்காக பைக்கை பிடுங்கி வைத்துக் கொண்ட தனியார் மருத்துவமனை

0 394

திருப்பூரில் உள்ள ரேவதி மருத்துவமனையை கண்டித்து, அங்கு சிகிச்சை பெற்று, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது உயிரிழந்த நபரின் உறவினர்கள் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருமத்தம்பட்டியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகனும் விசைத்தறி தொழிலாளியுமான நவீன்குமார், கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து ரேவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவரிடம், கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றதற்காக ஐந்தரை லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்க பணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்து, பாக்கி தொகைக்காக நவீன்குமாரின் பைக்கை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு ரேவதி மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தாக சொல்லப்படுகிறது. ஆனால், நவீன்குமார் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதனால் நவீன்குமாரின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நவீன் குமார் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments