இசை வேளாண்மை முறையில் காய்கறிச் செடிகள் வளர்ப்பு

0 383

காஞ்சிபுரம் அருகே வயலக்காவூர் கிராமத்தில் புல் பூண்டுகளுக்கு இடையே  உழவு செலவு ஏதுமின்றி இசைவேளாண்மை முறையில் காய்கறிகளைப் பயிரிட்டு பொறியியல் பட்டதாரி பெண் ஒருவரும், அவரது தந்தையும் அசத்தி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சந்தியாவும், அவரது தந்தையும், வயலக்காவூர் கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர். தனது தந்தையின் வழிகாட்டுதலுடன், இசை வேளாண்மை முறை எனப்படும் குறைந்த அளவுள்ள நிலத்திலும் உழவு பணி செய்யாமல் புல் பூண்டுகள் இடையே சிறு துளைகளை அமைத்து, அதில் சஞ்சீவி மூலிகை நீர் என்று அழைக்கப்படும் மூலிகை நீரை ஊற்றி ஒரே குழியில் 5 வகையான காய்கறிச் செடிகளை அவர்கள் நடுகின்றனர்.

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய செடிகொடிகளின் தழைகளையும், மாட்டு சாணத்தையும் மூலிகை நீருடன் கலந்து மக்க வைத்து, அதில் கிடைக்கும் நீரை, குறைந்த அளவு நீரில் கலந்து செடி கொடிகளுக்கு தெளித்து வளர்க்கின்றனர். இதனால் மகசூலும் அதிகரித்து சத்தான காய்கறிகளும் கிடைப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments