F3 கார் பந்தயத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார்

0 316

இத்தாலியில் நடந்த பார்முலா 3 எனப்படும் F3 கார் பந்தயத்தில் கொடூரமான விபத்தில் சிக்கிய பந்தய வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மோன்ஸா நகரில் F3 பந்தயப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக்ஸ் பெரோனி என்ற 19 வயது இளம் வீரர் பங்கேற்றார்.

தகுதிச் சுற்றுக்கான இந்தப் போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற அலெக்ஸின் கார் ஒருகட்டத்தில் நிலைதடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதி காற்றில் பலமுறை சுழன்று விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கிய அலெக்ஸ் பெரோனி எந்தக் காயமுமின்றி காருக்கு இருந்து வெளியே நடந்து சென்ற காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அவர் ஆசையாக ஓட்டிச் சென்ற கார் அப்பளம் போல நொறுங்கி விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments