பாகிஸ்தானின் முதலீட்டாளர் மாநாட்டில் ஆபாச நடனம் - இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

0 690

பாகிஸ்தானில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆபாச நடனம் ஆடப்பட்ட விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார மந்தநிலையைப் போக்கும் வகையில் அந்நாட்டின் சர்ஹாத் வர்த்தக மையம் சார்பில் அஸர்பைஜானின் பாஹூ என்ற இடத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

இதற்காக சர்வதேச அளவில் பார்வையாளர்களும், முதலீட்டாளர்களும் வந்திருந்தனர். அப்போது உணவு இடைவேளையின் போது ஆபாச உடல் அசைவுகளுடன் பெல்லி நடனம் ஆடப்பட்டது.image

அதுவும் பாகிஸ்தானின் தேசியக் கொடியுடன் நடந்த இந்த நடனத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஆபாசத்தைக் காட்டியாவது பாகிஸ்தான் முதலீடுகளைப் பெற முயற்சிக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments