சென்னையில் பிரபல நடிகர் ராஜசேகர் உடல்நலக்குறைவால் மறைவு

0 678

பிரபல இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 59.

பாலைவனச் சோலை என்ற படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களுள் ஒருவர் ராஜசேகர். தனது நண்பரான ராபர்ட்டுடன் இணைந்து மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப் பேசு, தூரம் அதிகமில்லை, பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை, கல்யாணக் காலம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கினார்.

இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் பிரபல சின்னத்திரை தொடர்களில் வலம் வந்த ராஜசேகர் உடல்நலக்குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜசேகர் இன்று காலை மரணமடைந்தார். ராஜசேகரின் திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரைத்துறை வட்டாரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments