போக்குவரத்து சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் -மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 176

சாலை விதிமீறல்களுக்கான அபராதம் பத்து மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு சமூகவலைதளங்கள் மூலம் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார்.

5 ஆயிரம் ரூபாய். 10 ஆயிரம் ரூபாய் என்று அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, ஜிஎஸ்டி வசூலையும் தாண்டியிருக்கும் என்று ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குருகிராமில் ஒரு சரக்கு லாரி ஓட்டுனர் பத்து விதிமீறல்களை செய்ததாக அவருக்கு 59 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதையும், ஆட்டோ ரிக்சா ஓட்டுனருக்கு அவருடைய ஆட்டோ விலையை விட அதிகமான அபராதம்விதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

சட்டத்தை மதிக்க வேண்டும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். சாலை பாதுகாப்புக்காக இந்த கடுமையான விதிகள் அவசியம்தான் என்று அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments