நடிகர்களில் சிலர் அதிக சம்பளம் பெறுவது தொடர்பாக அடுத்த வாரம் நல்ல முடிவு

0 405

நடிகர்களில் சிலர் அதிக சம்பளம் பெறுவது தொடர்பான பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர் சங்கமும் தங்களுக்குள் கலந்து பேசி அடுத்த வாரம் நல்ல முடிவை அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிச்சேரியில் குளம் சீரமைப்புப் பணிகளை துவக்கிவைத்த அமைச்சர், பின்னர் கயத்தாரில் நடைபெற்ற குடிநீர் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமா டிக்கெட்டுகளை முழுவதுமாக ஆன்லைனில் விற்பனை செய்யும் முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகக் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments