புற்றுநோயில் இருந்து மீண்டு வர தனக்கு யுவராஜ் சிங் தான் முன்னுதாரணமாக இருந்தார்- மனிஷா கொய்ராலா

0 603

புற்றுநோயில் இருந்து மீண்டு வருவதற்கு தனக்கு யுவராஜ் சிங் தான் முன்னுதாரணமாக இருந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

தமிழில் இந்தியன், பாம்பே, முதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

அதன் பிறகு புற்றுநோய் குறித்த அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒன்றை இழக்க நேரிடும் போது தான் அதன் மதிப்பு நமக்கு தெரியவரும் என்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்திற்கு அருகே சென்ற போது, வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தான் உணர்ந்ததாகவும் மனிஷா தெரிவித்துள்ளார்.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, முன்னர் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தான் தனக்கு முன்னுதாரணமாக இருந்ததாக தெரிவித்த அவர், இனி நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments