மந்திரி பதவியை ராஜினாமா செய்த சகோதரருக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்றி

0 272

அனைவரும் வியக்கும்படி திடீரென அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தனது சகோதரர் ஜோவுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

குடும்ப விசுவாசத்திற்கும், தேசிய நலனுக்கும் இடையிலான மோதலைக் காரணம் காட்டி, நாடாளுமன்றத்தில் இருந்து விலகுவதாக இளைய சகோதரர் ஜோ கூறியுள்ளார் என்றும் சகோதரர் ஜோ திறமையான, ஒரு சிறந்த அமைச்சர், அவர் ஒரு அருமையான நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும், பிரதமராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் இருக்கும், தான், தனது சகோதரர் ஜோவுக்கு இது எளிதான காரியமல்ல என்பதை உணர்ந்திருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஒப்பந்தமே இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொண்ட பிரக்சிட் முயற்சி நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்சனின் சகோதரர் ஜோ, மந்திரி சபையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments