நீராபானத்தை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்ய திட்டம்

0 360

வெளிநாடுகளுக்கு நீராபானத்தை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யும் வகையில், பொள்ளாச்சி அருகே பாட்டிலிங் ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்னை விவசாயத்தில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், தேங்காயின் விலை ஒரே நிலையாக இல்லாமல் அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தென்னை மரத்தில் இருந்து நீரா பானத்தை இறக்குவதற்கு தமிழக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அனுமதியளித்தது.

இதன்பின்னர், நீரா பானத்தை இறக்கி, பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். நீரா பானம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் பொதுமக்களிடையேயும் அதிக வரவேற்பு காணப்பட்டது.

இந்நிலையில், தென்னை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொள்ளாச்சியில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு நீரா பானத்தை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்வதற்கு தமிழக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் நீரா பானத்தை அடைப்பதற்கான பாட்டில்களைத் தயாரிக்கும் ஆலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமன், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments