நிலவின் சமதளப் பரப்பில் விக்ரம் கலனை தரை இறக்க முயற்சி - மூக்கையா

0 340

நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும் எனத் தெரியாது என்பதால், சந்திரயான் 2-ன் விக்ரம் கலனை, சமதளப் பரப்பில் மென்மையாக தரை இறக்க இஸ்ரோ முயற்சித்து வருவதாக மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாக இயக்குநர் மூக்கையா தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் இயற்பியலாளர் விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழாவை இஸ்ரோ கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு நெல்லையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில், விண்வெளித் திட்டம் குறித்த 4 நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட், சந்திரயான் 2 கலன் போன்றவற்றின் மாதிரிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை, மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாக மைய இயக்குநர் மூக்கையா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான் 2ன் விக்ரம் கலனில் உள்ள பிரக்யான் ஆய்வூர்தி, 14 நாட்கள் மட்டுமே நிலவில் ஆய்வு செய்யும் என்றும், எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு பிரக்யானின் தகவல்கள் உதவும் என்றும் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments