மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடும் சி.சி.டி.வி. காட்சிகள்

0 177

சென்னை ஆதம்பாக்கத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடும் கும்பலை சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

ஆதம்பாக்கம் கக்கன் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவர் நேற்று முன்தினம் இரவு தனது விலையுர்ந்த புல்லட் இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற நிலையில் மறுநாள் காலையில் வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத இருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். ஆதம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போவதற்கு இந்த இரு நபர்களின் கைவரிசை காரணமாக இருக்கக் கூடும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments