பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை நிராகரித்தனர் எம்பிக்கள்

0 210

பெரும்பான்மையை இழந்ததால் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்ற பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை எம்பிக்கள் நிராகரித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இதற்கு பிரக்சிட் மசோதாவை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதைய தெரசா மே தலைமையிலான அரசு வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் அவர் கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.

பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய வேண்டிய நிர்ப்பந்தத்தால், கடந்த 3ம் தேதி மீண்டும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி பிலிப் லீ அக்கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை ஆதரவை இழந்தார்.

இதனால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்று போரீஸ் ஜான்சன் யோசனை தெரிவித்தார். இதனை எம்பிக்கள் நிராகரித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments