மூன்றரை வயதுக் குழந்தைக்கு தலைகவசம் அணிவித்த வாகன ஓட்டி

0 744

சென்னையில் வாகன ஓட்டி ஒருவர் தனது மூன்றரை வயது குழந்தைக்கு தலைகவசம் அணிவித்து சென்றதற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

இருசக்கர வாகனங்களை ஓட்டுவோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் தலைகவசம் அணியத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், அயனாவரத்தைச் சேர்ந்த ஜனார்த்தன் என்பவர் தானும் தலைகவசம் அணிந்ததுடன், மூன்றரை வயதுக் குழந்தைக்கும் தலைகவசம் அணிவித்து அழைத்துச் சென்றார்.

போக்குவரத்து விதிமுறைகளை மதித்து முன்மாதிரியாக செயல்பட்ட ஜனார்த்தனையும், அவரது குழந்தை துஷார் ஹரியையும் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டினார். போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் இந்நிகழ்வின்போது உடனிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments