சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மித்தாலி ராஜ் ஓய்வு

0 382

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் அறிவித்துள்ளார்.

36 வயதான மித்தாலி ராஜ், 32 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக செயல்பட்டவர். 2006ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்திய மகளிர் அணி, டி20 போட்டிகளில் ஆடத் தொடங்கிய போது அணியை வழிநடத்தியவர் மித்தாலி ராஜ்.

மூன்று 20 ஓவர் உலகக்கோப்பைத் தொடர்களிலும் மித்தாலி ராஜ் கேப்டனாக இருந்துள்ளார். 89 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 ஆயிரத்து 364 ரன்கள் எடுத்துள்ளார். 2000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மித்தாலி ராஜ் படைத்துள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

தாய் நாட்டிற்கு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற சிறப்பாக செயல்படப் போவதாகவும் மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் பிசிசிஐக்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் மித்தாலி ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments