பிரதமரின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா பதவி விலகல்

0 1500

பிரதமரின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து நிருபேந்திர மிஸ்ரா பதவி விலகினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவிக்கு வந்தது முதல் அவரது நெருங்கிய உதவியாளர்களில் ஒருவராக விளங்கியவர் நிருபேந்திரமிஸ்ரா. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், டிராய் தலைவர், தொலைத் தொடர்புத்துறை செயலாளர் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவர்.

முதன் முறையாக பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற போது அவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. மிகச் சிறந்த அதிகாரியான நிருபேந்திர மிஸ்ரா தான் பிரதமர் பதவிக்கு புதியவராக இருந்த காலத்தில் பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் அவை இன்றும் மிகவும் பலனுள்ளவையாக இருப்பதாகவும் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் அவர் பதவி விலக விரும்பியதாகவும், ஆனால் தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதுவரை தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர் செப்டம்பர் 2-வது வாரம் வரை பதவியில் இருப்பார் என்று கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments