ஒரே நாளில் 15,000 விதைப்பந்துகளை தயாரிக்கும் தன்னார்வலர்கள்

0 197

பொள்ளாச்சியில், பசுமைக் காடுகளை உருவாக்கும் விதமாக பள்ளி மாணவர்களுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனம் ஒரேநாளில் 15 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

image

மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதன் விளைவாக பருவ நிலையில் கடுமையான மாற்றங்கள் நிகழ்த்து வருகிறது.

இந்த நிலையில் பசுமைக்காடுகளை உருவாக்கும் விதமாக தனியார் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மருதம் எனப்படும் தொண்டு நிறுவனம் விதைப் பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

image

களிமண்ணில், உரம், சாம்பல், போன்றவை கலக்கப்பட்டு அதை நீர ஊற்றி  பக்குவப்படுத்தி அதனுள் ஆல மர விதை,  புளியமர விதை, அரச மர விதை, வேப்ப மரத்தின் விதை உள்ளிட்டவைகளை சேர்த்து விதைப்பந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த பணியில் சுமார் 800 மாணவ-மாணவியர் ஈடுபட்டுள்ளனர். ஏறத்தாழ 15 ஆயிரம் விதைப்பந்துகள் வரை தயாரிக்கப்பட உள்ளதாகவும், அவைகள் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் விதைக்கப்பட உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments