சிம்பு விவகாரத்துக்கு சீமான் பஞ்சாயத்து..! திருந்துவார் என நம்பிக்கை

0 507

மிழ் திரை உலகில் ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்திற்கு சிம்பு தான் வருவார் என்றும் அவரிடம் உள்ள ஒரே குறை படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராதது மட்டுமே என்று  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு உள்ளார்.
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி இன்னும் 4 படங்கள் தான் நடிப்பார், என்றும் இனி என் தம்பி விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்று உலகமே சொல்கிறது என்றார்

அதே போல முன்பு சூப்பர் ஸ்டாராக சீமானால் முன்னிருந்தப்பட்ட சிம்பு, தற்போது தயாரிப்பாளர்களிடம் வம்பு செய்வது குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு, சிம்புவிடம் இது குறித்து பேசியதாகவும், செல்லமாக வளர்ந்த பிள்ளை என்பதால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வர இயலவில்லை என்று சிம்பு தெரிவித்ததாகவும், தான் சிம்புவை கண்டித்ததாகவும் சீமான் தெரிவித்தார்

அத்தோடு இல்லாமல் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீர் என ஆதரித்து பேசிய சீமான், சமூக வலைதளங்களில் மீம்ஸ் மற்றும் பிறரை விமர்சித்து கருத்து பதிவிடுபவர்களையும் கடுமையாக விமர்சித்தார்

அவ்வப்போது இது போல சீமான் தெரிவிக்கும் கருத்துக்கள் சிம்பு போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் என்கின்றனர் அவரது ரசிகர்கள், அதே நேரத்தில் சீமானின் கருத்துக்கு சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளார்

சிம்பு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்பதே அவரை நேசிக்கும் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments