சீக்கிய பெண் கடத்தப்பட்டு வலுகட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு

0 320

பாகிஸ்தானில் சீக்கிய இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

லாகூர் அருகே நங்கனா சாகிப் என்ற இடத்தில் 19 வயது இளம்பெண் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, வலுகட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவரை கட்டாயப்படுத்தி முஸ்லிம் இளைஞர் திருமணம் செய்து கொண்டதாகவும் பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவை இணைத்து டுவிட் செய்துள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர், சீக்கிய பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு, முஸ்லிம் இளைஞருடன் கட்டாயம் திருமணம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடந்த பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் சர்தார் உஸ்மான் புஸ்தார் உத்தரவிட்டுள்ளார்.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் திருமண வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் கடத்தியதாக கூறப்படும் இளைஞரன் அமர்ந்துள்ள அந்த பெண் எந்த அழுத்ததாலும் தான் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments