முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் - மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்

0 232

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்களில் கலந்து கொண்டு அமைச்சர் தங்கமணி மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பாப்பம்பாளையம் ஊராட்சிமன்ற அலுவலகம், அண்ணா நகர் மாரியம்மன் கோவில், ஆலாம்பாளையம், தெற்குப்பாளையம், எலந்தைக்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகம், ஆவத்திப்பாளையம், குப்பாண்டபாளையம் ஆகிய 7 இடங்களில் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்கள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கமணி மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 4 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை காசோலைகளையும் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments