போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த பாஜக பிரமுகர் கார் சேதம்

0 201

சேலம் மாவட்டம் சீரகாபாடியில், போக்குவரத்துக்கு இடையூறாக  நிறுத்தப்பட்டிருந்த பாஜக இளைஞரணி பொதுச்செயலாளரின் காரை இளைஞர் ஒருவர் சேதப்படுத்தினார்.

சீரகாபாடி பகுதியை சேர்ந்த சிவப்பிரிகாசம் என்பவர், பாஜக இளைஞரணி பொது செயலாளராக உள்ளார். கடந்த புதன்கிழமை இவர், தனது வீட்டின் அருகே உள்ள பாலம் போன்ற பகுதியில், காரை நிறுத்தி வைத்து வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காரை எடுக்க சென்றபோது, கார் கண்ணாடி முழுவதும் நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவம் நடந்த இடத்தில் சில கார்கள் நின்றிருந்ததும், இளைஞர் ஒருவர் சிவபிரகாசத்தின் கார் அருகே சென்று, அங்கு கிடந்த காங்கிரீட் துண்டுகளை எடுத்து  கார் மீது வீசி சேதப்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

தாக்குதல் நடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியை சேர்ந்த மோகன் குமார் என்பது தெரிந்தது. மேலும் முதற்கட்ட விசாரணையில், சிவப்பிரகாசம் தனது காரை தினந்தோறும் பாலம் அருகே நிறுத்தி செல்வதால் பிற வாகங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும்  இதுகுறித்து பல முறை பொதுமக்கள் அவரிடம் புகார் தெரிவித்தும், வாகனத்தை ஓரமாக நிறுத்தாமல் இருந்து  வந்ததாகவும், இதனால் தான் மோகன் குமார் காரை சேதப்படுத்தியிருக்க கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள மோகன்குமாரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments