பால் விலையை உயர்த்தி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

0 537

புதுச்சேரியில், பாண்லே பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்தி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என கடந்த 2014ம் ஆண்டு முதல் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படாததால், கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் தீவனம், தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட பராமரிப்பு செலவுகளும் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசித்து வந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தில், கறவை மாடுகள் வளர்ப்போரின் நலன் கருதி பாண்லே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்தார்.

அதன்படி பால் கொள்முதல் விலை ஏற்கனவே இருந்த 30 ரூபாயிலிருந்து 34 ரூபாய்க்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விற்பனை விலையும் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி முதலைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

குறிப்பாக சமன் படுத்திய பாலின் விலை 36 ரூபாயிலிருந்து 42 ரூபாய் ஆகவும், சிறப்பு சமன் படுத்திய பாலின் விலை 38ல் இருந்து 44 ரூபாய்க்கும், நிலைப்படுத்திய பாலின் விலை 42ல் இருந்து 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments