டொரியன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கரீபியன் தீவுகள்

0 174

கரீபியன் தீவில் வெள்ளத்தில் சாலையின் ஒரு பகுதி முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டது.

கரீபியன் தீவுகளில் பல இடங்ளில் டொரியன் புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வெர்ஜின் தீவின் செயின்ட் தாமஸ் பகுதிக்கு அருகே இந்த புயலானது மையம் கொண்டிருந்தது. இது பியூர்டோ ரிகோ தீவை கடந்து, கிழக்கு திசையில் தென்கிழக்கு பஹாமஸ்க்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலினால் மார்டினிக் பிரென்ச் கரீபியன் தீவில் இருக்கும ரிவிரே பைலட் நகரில் கனமழை பெய்து, வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் முழ்கின.

இந்நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்நகரின் சாலை ஒன்றின் ஒரு பகுதி முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து அதன் வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments