நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக உதிக்க வேண்டும் - வைரமுத்து

0 261

தமிழ் இல்லை என்றால் இந்தியா இல்லை என்பதை நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் உரக்க ஒலிக்க வேண்டுமென கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார். அவர் எழுதிய தமிழாற்றுப்படை என்னும் புத்தகத்தின் அறிமுக விழா திருப்பூரில் நடைபெற்றது.

இதில் பேசிய அவர், வட நாட்டு பண்பாடுதான் கலாச்சாரம் என்று சொல்பவர்கள் மத்தியில் தமிழ்மொழி இல்லையென்றால் இந்தியா கிடையாது என்பதை நாடாளுமன்றத்தில் உரக்க பேச வேண்டும் என்றார்.

இனி குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர், தமிழ் பெயர் தெரியவில்லை என்றால் எந்த நேரமும் தம்மை அழைக்கலாம் என்றார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய கணிப்பொறி தலைமுறையினரும் தமிழை ஏன் கற்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான விடையை தமது புத்தகத்தில் தந்திருப்பதாக கூறினார்.

நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழியாகும் நாளே தமிழர்களின் கனவு நிறைவேறும் நாள் என அவர் கூறினார். தமிழாற்றுப்படை புத்தகம் எழுத எடுத்துக்கொண்ட 4 ஆண்டுகாலத்தில் திரைத்துறையில் வாய்ப்புகளை தவிர்த்து வந்ததாக வைரமுத்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பலர் பேசினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments