பட்ஜெட்டில் வரிகுறைப்புக்கான அறிவிப்புகள் இல்லை- பாஜக எம்.எல்.ஏக்கள்

0 82

புதுச்சேரியில் குப்பை வரியை குறைப்பதாக உறுதியளித்த முதலமைச்சர், பட்ஜெட்டில் அது குறித்த அறிவிப்புகளை வெளியிடாததால் பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் குப்பை தொட்டிகளுடன் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி 2019 - 2020 ஆண்டுக்கான பட்ஜெட்டை புதன்கிழமை தாக்கல் செய்தார். முன்னதாக உயர்த்தப்பட்ட வீட்டு வரி, தொழில்வரி, குப்பை வரி ஆகியவற்றை குறைப்பதாக முதலமைச்சர் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட்டில் அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன எம்.எல்.ஏக்கள், குப்பைத் தொட்டிகளுடன் சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்களுடன் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments