கிருஷ்ணரைப்போல புல்லாங்குழல் இசைத்தால் பசுக்கள் கூடுதலாக பால் கொடுக்கும்

0 279

கிருஷ்ணர் இசைப்பதைபோல புல்லாங்குழல் இசைத்தால் பசுக்கள் கூடுதலாக பால் கொடுக்கும் என அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ., ஒருவர் கூறியது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அசாமின் சில்ச்சார் தொகுதி எம்.எல்.ஏவான திலிப் குமார் பால், அவரது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பகவான் கிருஷ்ணர் இசைக்கும் தனித்துவமான புல்லாங்குழல் இசையைப்போல இசைத்தால் அதை காதால் கேட்கும் பசுக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக பால் கொடுக்கும் எனவும், அந்த இசையில் அவ்வளவு சிறப்பு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், இதற்கு விளக்கமளித்துள்ள அவர், இந்த கருத்து தனது தனிப்பட்ட கருத்து அல்ல எனவும், குஜராத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு இதுகுறித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையிலேயே தான் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பகவான் கிருஷ்ணர் புல்லாங்குழல் இசைத்ததென்பது வெறும் பொழுதுபோக்குக்காக அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏவின் இந்த கருத்தானது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments