பிரேசில் அரசின் எட்டுமாத ஆட்சி கொடுமையானது என்று மக்கள் கருத்து

0 207

பிரேசில் அதிபர் ஜாயர் போல்சோனாரோவின் தலைமையிலான அரசு மக்களின் செல்வாக்கை இழந்து வருவதாக அண்மையில் வெளியான கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு 38 புள்ளி 9 சதவீதம் ஆதரவு இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் அது 29 புள்ளி 4 சதவீதமாக சரிந்துள்ளது.

அவருடைய எட்டுமாத அரசு மிகவும் கொடுமையானது என்றும் மோசமானது என்றும் கருத்து அதிகரித்துள்ளது.அதிபராக அவருடைய தனிப்பட்ட செல்வாக்கும் 53 புள்ளி 7 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக குறைந்துள்ளது.

தமது மகன் எடுராடோவை அமெரிக்காவுக்கான பிரேசிலின் தூதராக அவர் நியமனம் செய்ததும் தவறு என 72 சதவீத்திற்கும் அதிகமானோர் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments