கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

0 310

கேரளாவில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் கேரளாவில் கனமழை பெய்து, பல மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இதில் பலர் உயிரிழந்த நிலையில் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் 7 முதல் 11 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்க கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் 4 மீட்டர் உயரத்தில் அலைகள் எழும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த 5 மாவட்டங்களிலும் அனைத்து துறை அதிகாரிகளும், மீட்புப்படையினரும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக கேரள மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments