தங்கம் விலை புதிய உச்சம்..!

0 1185

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை காலையில் சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் சவரனுக்கு 264 ரூபாய் விலை குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பல புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் இன்று காலையில் தங்கம் விலை 304 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் பிற்பகலுக்கு மேல் தங்கம் விலை சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 29 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் இந்த விலை நேற்றைய விலையை விட 40 ரூபாய் அதிகமாகும்.

காலையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 38 ரூபாய் உயர்ந்து, மூவாயிரத்து 718 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிற்பகலில் ஒரு கிராம் 33 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 685 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலையும் நேற்றைய விலையை விட 5 ரூபாய் அதிகமாகும்.

காலையில் அதிகரித்த வெள்ளி விலையும் பிற்பகலில் சற்றே குறைந்தாலும், நேற்றைய விலையை விட அதிகரித்தே விற்பனையாகிறது. அதன்படி சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 60 காசுகள் அதிகரித்து 49 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments