4 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதி விபத்து -ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் உயிர்தப்பினர்

0 420

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் உயிர்தப்பினர். 

மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்த சரவணன் ,கார்த்திக் ,செல்லூர் பகுதியை சேர்ந்த ஜமீன் மைதீன் ,பாரதி,பீபிகுளம் பகுதியை சேர்ந்த திருக்குமார் ஆகிய 5 பேரும் 3 மோட்டார் சைக்கிள்களில் நேற்று மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றனர்.

பின்னர் இரவில் அங்கிருந்து புறப்பட்டு மதுரை - ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில், மானாமதுரை அடுத்த ராஜகம்பீரம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது தவறான பாதையில் எதிர் திசையில் மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த சிக்கந்தர் சேட் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.

அதிவேகமாக தவறான பாதையில் வந்த சிக்கந்தர் சேட்டின் என்பீல்டு பைக் மதுரை இளைஞர்களின் வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் அனைவரும் படுகாயம் அடைந்தனர். மேலும் மோதிய வேகத்தில் சிக்கந்தரின் ராயல் என்பீல்டு பைக்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு 4வழிச்சாலையின் நடுவில் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது

விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் அனைத்து இளைஞர்களும் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிய அளவில் காயமின்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments