விமான நிலையத்தில் டாக்சி புக்கிங் - பயணிகள் அதிருப்தி

0 314

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு டாக்சி கிடைப்பது பெரும் பாடாக உள்ளது.

ஓலா என்ற ஒரேயொரு கேப் நிறுவனத்திற்கு மட்டும் விமான நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றிச்செல்ல உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மும்பை உள்ளிட்ட இதர விமானநிலையங்களில் உள்ளது போல் தமக்கான கேப் சேவையை தேர்வு செய்யும் வாய்ப்பு சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு இல்லை.

ஓலா-உபர் போன்ற டாக்சி நிறுவனங்களின் கட்டணத்தை ஒப்பிட்டு குறைந்த கட்டணத்தில் டாக்சியை புக்கிங் செய்யும் வசதி சென்னை விமான நிலையத்தில் இல்லை என்று பயணிகள் குறை கூறுகின்றனர். இதில் சில டாக்சி ஓட்டுனர்கள் மிக அதிகமான கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகளுடன் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments