போலி நகைகளை அடகு வைத்து, 5 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த கணவன் கைது

0 655

நாகை மாவட்டம் சீர்காழி அருகே போலி நகைகளை அடகு வைத்து 25 லட்சம் வரை ஏமாற்றி 5 மனைவிகளுடன் சொகுசாக வாழ்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சீர்காழி,சட்டநாதபுரம்,புத்தூர்,மங்கைமடம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள அடகு கடைகளில் தங்கநகை எனக்கூறி முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து 10 லட்சம் வரை பணத்தை பெற்று வந்த திருவாரூர் மாவட்டம் பேரையூர் சேர்ந்த மாதவன் என்பவனை போலீசார் சிசிடிவி உதவியுடன் கைது செய்தனர்.

விசாரணையில் தமிழகம் முழுவதும் பல அடகு கடைகளில் தங்க நகை என கூறி 25 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெற்று வந்தது தெரிய வந்தது. மேலும் அப்பணத்தின் மூலம் தனது 5 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கையை வாழ்வதற்காக சொகுசு வீடு , கார், புது பைக் என ஆடம்பர வாழ்க்கை வந்துள்ளதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து அவனிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பல பெயர்களில் போலி ஆதார் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை,ஓட்டுநர் உரிமம் என பல அடையாள அட்டைகள் உள்ளூர் முகவரியில் வைத்துள்ளதையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments