ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்கிறது சிஏஜி

0 207

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவான சிஏஜி வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. ரபேல் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன.

இதையடுத்து மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த அறிக்கையில் மூன்று பாதுகாப்புத் துறைகளின் ஒப்பந்தங்கள் குறித்த ஆய்வு குறித்து வெளியிடப்படும்.2012 முதல் 2013 வரை மேற்கொள்ளப்பட்ட 32 வெளிநாட்டு ஒப்பந்தங்கள் குறித்து இந்த ஆய்வு தணிக்கை செய்துள்ளது.

36 ரபேல் போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் இணைத்துக் கொள்ளப்பட்டதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரான்ஸ் விமானத் தயாரிப்பு நிறுவனமான டஸால்ட் அடுத்த மாதம் ரபேல் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments