ஜி7 உச்சி மாநாட்டில் அமேசான் நெருப்பை அணைக்க முடிவு

0 637

பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் அமேசான் காட்டு தீயை கட்டுப்படுத்த உதவி செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உள்ள பியாரிட்ஸ் (biarritz) நகரில் 45வது ஜி7 மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அமோசான் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு விரைவில் உதவுதற்கு மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சனிக்கிழமை வடகொரியா குறைந்த தூர இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியது குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், இந்த விவகாரம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்றாலும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் அன் ஒப்பந்த விதிமீறல் எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். அதே சமயம், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது, ஐ.நாவின் தீர்மானங்களை மீறும் செயல் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் ஜி7 மாநாடு நடைபெறும் நகரை சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கிடையே ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது ஜாவித் ஜரிப் ஜி 7 மாநாடு நடைபெறும் நகருக்கு சென்றுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் விதத்தில், மாநாட்டில் பங்கேற்ற பிரான்ஸ் அழைப்பு விடுத்ததாகவும், எனினும் அவர் அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்று செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments