கூறைப்பட்டு நலிந்து வரும் தொழில் கூடங்கள்..!

0 257

பாரம்பரிய சேலைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள, பிரசித்தி பெற்ற கூறைப்பட்டு சேலைகள் உற்பத்தி கூடங்களை மேம்படுத்த வேண்டும் என்று அரசுக்கு நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெண்கள் அதிகம் விரும்புவது பட்டுச்சேலைகள் என்றாலும் அவற்றை சிறிது நேரம் மட்டுமே கட்டியிருக்க முடியும். நேரம் செல்லச்செல்ல உடல் வெப்பம் காரணமாக, வியர்க்கத்தொடங்கி விடும். எனவே தான் பெண்கள் பருத்தி கலந்த பட்டுச்சேலைகளை விரும்புகிறார்கள்.

மயிலாடுதுறை கூறை நாட்டில், தயாராகும் கூறைப்பட்டு சேலைகள், கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் கதகதப்பையும் தரும் வகையில் 80 சதவீத பட்டு, 20 சதவீத பருத்தி கலந்து உருவாக்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்திலிருந்து சோழ மன்னனால் வரவழைக்கப்பட்ட நெசவாளர்கள், கூறைநாடு பகுதியில் குடியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தனித்தனியாக நெசவு நெய்து வந்த நெசவாளர்களை ஒன்றிணைத்து 1965-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலத்தால் கூறை டெக்ஸ், பட்டு உற்பத்தி என்ற பெயரில் கூட்டுறவு தொழில்கூடம் தொடங்கப்பட்டது நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கி வந்த நிலையில், நலிவடைந்து, தற்போது 7 நெசவுத்தறிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன.

ஒருவர் ஒரு சேலை நெய்வதற்கு சுமார் ஒருவார காலம் ஆகிறது. அவை 4 ஆயிரத்து 500 ரூபாயில் தொடங்கி, 12 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாவதாகவும், தற்போது, பாரம்பரிய ஆடைகளுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுவரும் நிலையில், கூறைநாடு சேலை உற்பத்தி தொழிலுக்கு அரசு புத்துயிரூட்ட வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments