பார்வையாளர்களை கவர்ந்த பூனைகள் கண்காட்சி

0 201

மிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் நடைபெற்ற பூனைகள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பொதுவாக நாய்கள் கண்காட்சி, குதிரை கண்காட்சி மற்றும் பறவைகளுக்கான கண்காட்சியை பார்த்திருப்போம். ஆனால் தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் பூனைகளுக்கான கண்காட்சி நடைபெற்றுள்ளது.

உலகில் உள்ள 98 வகையான பூனைகளில், 40 வகையான பூனைகள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றை பாதுகாக்கும் வகையில் கோவையில் அலையன்ஸ் ஆஃப் கேட் பேன்ஸியர் இந்தியா என்ற அமைப்பின் அங்கீகாரத்துடன் கோயம்புத்தூர் கேட்டரி கிளப் என்ற பெயரில் பூனைகளின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ரோட்டரி கிளப் டெக்ஸ்சிட்டி அரங்கில் முதல்முறையாக பூனைகளுக்கென கண்காட்சி நடைபெற்றது.

இதில் பெர்சியன் லாங், பெர்சியன் சாட், பெர்சியன் ஹேர் லெஸ், சைபீரியன், ரஷ்யன் ப்ளூ, பெங்கால் வகை பூனை, ஹிமாலயன் வகை பூனை, சயாமிஸ் வகை பூனை என மொத்தம் 25க்கும் மேற்பட்ட ரக பூனைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாது கோவையில் உள்ள பூனை பிரியர்களும் தங்களது நாட்டு பூனைகளை கண்காட்சிக்கு கொண்டு வந்திருந்தனர்.

புசு புசு வென்ற முடியுடன் வண்ண வண்ண நிறங்களில் சுட்டித் தனத்துடன் இருந்த பூனைகளை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சிலர் பூனைகளை குழந்தைகள் போல கொஞ்சி விளையாடியும் மகிழ்ந்தனர்.

கண்காட்சியில் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி, குடல்புழு நீக்கம் போன்ற மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதையடுத்து பூனை வளர்ப்பு குறித்த கருத்தரங்கும் நடைபெற்றது. அப்போது பூனைகளை நோய் தாக்குதல்களில் இருந்து எவ்வாறு காப்பது, அவற்றிற்கு வழங்க வேண்டிய மருந்து மற்றும் உணவு முறைகள் குறித்து பூனை பிரியர்களுக்கு விளக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments