தமிழக இளைஞரை தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்த ஜப்பானிய பெண்

0 964

கும்பகோணத்தை சேர்ந்த இளைஞரை கரம் பிடித்த ஜப்பான் இளம்பெண்ணுக்கு, தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.

கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த வசந்தன் என்பவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு அங்கு வேலை செய்து வந்துள்ளார். அ

ப்போது அவருக்கு முகநூல் வழியாக ஜப்பானை சேர்ந்த வழக்கறிஞர் மேகுமி என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். அவர்களது நட்பு காதலாக மலரவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் இன்று, கும்பகோணத்தில் வைத்து தமிழ் பாராம்பரிய கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் பெற்றோர் வர இயலாததால், அவரது தாய் மாமன் முன்நின்று, பெற்றோருக்கான சடங்குகளை செய்தார்.

இத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் தங்கை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ் கலாச்சாரப்படி வேட்டி, புடவை அணிந்து திருமணத்துக்கு வந்தவர்களை வாழ்த்தி வரவேற்றது மண்டபத்தில் இருந்த பலரையும் நெகிழ செய்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments