வடகொரியாவுடன் நல்ல உறவு இருக்கிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப்

0 202

வடகொரியாவுடன் உண்மையிலேயே நல்ல விதமான உறவு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அணு ஆயுத ஒழிப்பு மற்றும் ஏவுகணை பரிசோதனை திட்டங்கள் தொடர்பாக வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்படவில்லை. ஒப்பந்தம் எட்டப்படும் பட்சத்தில் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாத நிலையில், கொரிய தீபகற்பத்தில், அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவ்வப்போது ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தி அமெரிக்காவையும், தென் கொரியாவையும் எச்சரித்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 7 முறை ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுடன் உண்மையிலேயே நல்ல உறவு இருப்பதாகக் கூறினார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தன்னுடன் நேருக்கு நேராக பேசுபவர் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments