தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் அருண் ஜேட்லிக்கு அஞ்சலி

0 544

டெல்லியில் காலமான முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தியாகராயநகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுத்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, அருண் ஜேட்லியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார், அருண் ஜேட்லியின் இழப்பு கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் தனக்கும் இழப்பு என வருத்தத்துடன் கூறினார்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments