அடுத்தடுத்து 2 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளான ஆரகோட்

0 381

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கிய பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாசியில் உள்ள ஆரகோட் பகுதிக்கு அருகே உள்ள வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி, துணை விமானி, உள்ளூர் வாசி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். வயரில் சிக்கி விமானம் விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து டிஜிசிஏ விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த வெள்ளியன்றும் ஆரகோட் பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இதில் உயிர்சேதம் ஏதும் இல்லாத போதும் ஹெலிகாப்டர் கடுமையான சேதத்துக்கு உள்ளானது. இந்நிலையில், அப்பகுதிக்கான அனைத்து ஹெலிகாப்டர் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments