தீவனபற்றாக்குறையை தீர்க்க 15 ஆராய்ச்சி மையங்கள் - உடுமலை ராதாகிருஷ்ணன்

0 264

தமிழகத்தில் கால்நடை தீவனபற்றாக்குறையை தீர்க்க 15 ஆராய்ச்சி மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட சமத்தூர் பேரூராட்சில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் 264 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கேயம் இன காளைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக பவானிசாகர் பகுதியில் இரண்டரை கோடி ரூபாய் செலவில் உரை விந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பர்கூர் இன மாடுகளை பாதுகாக்க நான்கரை கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments